உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வரலாறு முக்கியம்: ராமேஸ்வரம் கோயிலில் மன்னர்கள் கற்சிலைகள்: அவர்களது பெயர், சிறப்பை பதிவு செய்ய வேண்டும்

வரலாறு முக்கியம்: ராமேஸ்வரம் கோயிலில் மன்னர்கள் கற்சிலைகள்: அவர்களது பெயர், சிறப்பை பதிவு செய்ய வேண்டும்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் சேதுபதி மன்னர்களின் சிலைகள் உள்ளன. இவர்களது பெயர், சிறப்பை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் எழுதி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் வரலாற்று ஆய்வாளர் கோ.மாரி சேர்வை கூறியதாவது: புகழ்பெற்ற ஆன்மிக தலமான ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்கள், கல் துாண்கள் உள்ளன. இதற்கு காரணமான திருப்பணிகள் செய்த சேதுபதி மன்னர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அம்மன் சன்னதியில் இரு பக்கங்களிலும் விஜயரகுநாத சேதுபதி, முத்திருளப்ப பிள்ளை, முத்துவடுகநாதத் தேவர், பெரிய திருவுடையாத் தேவர். சேதுபதி காத்தத்தேவர், சின்னத்தேவர், ரகுநாத சேர்வை, மூன்றாம் பிரகாரத்தில் திருமலை ரெகுநாத சேதுபதி திருவுருச்சிலை, அவரது மகன் ஒரு சிறுவனுடன் காணப்படும் சிலைகள் உள்ளன. இவர்கள் ராமேஸ்வரம் கோயில் மற்றும் ராமநாதபுரம் சமஸ்தானத்தில் ஆன்மிக, சமுதாயப்பணிகள் என நிறைய செய்துள்ளனர். வரலாற்று பெருமை மிக்க மன்னர்களின் பெயர், அவர்களது விபரங்கள் குறித்து சிலைகள் மேலே எழுதி வைக்க வேண்டும். அப்போது தான் நமது இளைஞர்கள், வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் நமது சேதுபதி மன்னர்களின் வரலாற்று பெருமையை அறிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையருக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்றார். ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை