உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கள்ளக்காதலை கண்டித்ததால் கணவன் கொலை: கூலிப்படை தலைவன் கைது

கள்ளக்காதலை கண்டித்ததால் கணவன் கொலை: கூலிப்படை தலைவன் கைது

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 42. பட்டுக்கோட்டை அருகே ஆண்டிக்காடு கிராமத்தில் வசித்த இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி, 35, என்பவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கொடிக்குளத்தில் இருவரும் வாழ்ந்து வந்தனர்.அப்போது ஆர்த்திக்கும் அதே கிராமத்தை சேர்ந்த இளையராஜாவுக்கும், 35, கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த ஸ்ரீகாந்த் மனைவியை கண்டித்தார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய ஆர்த்தி திட்டமிட்டார்.இளையராஜா உதவியுன் கூலிப்படையினரை ஏவி, 2021 நவ.,ல் ஸ்ரீகாந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்து, சிவகங்கை மாவட்டம், சிறுவாச்சி காட்டுப்பகுதியில் புதைத்தனர். இச்சம்பவம் குறித்து இரு மாதங்களுக்கு முன் திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷுக்கு தகவல் கிடைத்தது.ஆர்த்தி, இளையராஜா மற்றும் கொலையில் தொடர்புடைய அஜித்குமாரை போலீசார் கடந்த ஏப்., 22ல் கைது செய்தனர். கூலிப்படையை சேர்ந்த சமயதுரை, ஆசைமுத்துவை தேடி வந்தனர்.இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்த நெய் வியபாரி வேல்முருகன், 51, என்பவரை சில நாட்களுக்கு முன்பு கூலிப்படையினர் கொலை செய்தனர்.இந்த வழக்கில், திருப்பாச்சேத்தி போலீசார் சமயதுரையை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். ஸ்ரீகாந்த் கொலையில் இவர் ஈடுபட்டதால் திருவாடானை எஸ்.ஐ., கோவிந்தன் சென்று சமயதுரையை மீண்டும் கைது செய்தார்.சமயத்துரை பல்வேறு கொலைகளை செய்து கூலிப்படைக்கு தலைவனாக விளங்கியதாக போலீசார் கூறினர். ஆசைமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ