உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நானும் உங்கள் உறவினர் தானுங்கோ 

நானும் உங்கள் உறவினர் தானுங்கோ 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். இவர் பாம்பன், தங்கச்சி மடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு கேட்டு சென்ற போது நானும் உங்கள் உறவினர் தானுங்கோ.. எனக்கூறி ஓட்டு கேட்டு வருகிறார். வேட்பாளர் ஜெயபெருமாள் மகனுக்கு ராமேஸ்வரம் பகுதியில் ம.தி.மு.க., நிர்வாகி கராத்தே பழனிசாமி மகனை திருமணம் செய்துள்ளார். எனது சம்பந்தி இந்தப்பகுதியை சேர்ந்தவர். அதனால் நானும் உங்கள் உறவினர்தான். இந்த மண்ணை சேர்ந்தவன் என்று ஓட்டு கேட்டார். உறவுகளைச் சொல்லி ஓட்டு கேட்டதால் மக்களிடையே ஆதரவு கிடைக்கும் என வேட்பாளர் ஜெயபெருமாள் நம்புகிறார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை