| ADDED : ஏப் 11, 2024 06:18 AM
பரமக்குடி : பரமக்குடி மஜ்ஜிதே நுார் தெற்கு பள்ளி வாசல் ஜமாத் சபை சார்பில் நடந்த மத நல்லிணக்க இப்பதார் நிகழ்ச்சியில் தலைவர் காதர் மீராக்கனி தலைமை வகித்தார். நிர்வாகி அப்துல் அஜீஸ் வரவேற்றார். பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, ஐக்கிய ஜமாஅத் சபை பொது செயலாளர் ஆலம், உலமாக்கள் சபை சார்பில் ஜலாலுதீன் பாகவி, அருட் சான்று நிலைய பணியாளர் அகஸ்டின், மோகன், ராஜாராம் பாண்டியன், பெருமாள், ராஜா, முகைதீன் முசாபர் அலி, அகமது கபீர், மாலிக் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், வியாபாரிகள் சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமுதாய இயக்கத்தினர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை தெற்கு பள்ளி ஜமாத் சபை மற்றும் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.