உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார்குடியில் குழாய் சேதமடைந்து     பலநாட்களாக வீணாகும்  குடிநீர் 

கார்குடியில் குழாய் சேதமடைந்து     பலநாட்களாக வீணாகும்  குடிநீர் 

ராமநாதபுரம், - ராமநாதபுரம் அருகே கார்குடி நயினார்கோவில் ரோட்டில் பாலம் வேலையில் சேதமடைந்த குழாய் மாற்றப்படாமல் பல நாட்களாக குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது.மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ராநமாதபுரம் அருகே ரூ.48 கோடியில் கிழக்குகடற்கரை சாலை சந்திப்பு இடையர் வலசை அருகே நயினார்கோவில் ரோடு துவங்கும் இடத்திலிருந்து 2 கி.மீ., அப்பால் புதிதாக ரோடு அமைத்தல், காவனுார், தொருவளூர் பகுதியில் இரண்டு ஆற்றுப்பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் குழாய் சேதமடைந்து பல நாட்களாக காவிரி குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக குழாயை மாற்றி குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ