உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஞ்சந்தாங்கியில் தென்னந்தட்டி முடையும் பணியில் பெண்கள் உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு

பஞ்சந்தாங்கியில் தென்னந்தட்டி முடையும் பணியில் பெண்கள் உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு

திருப்புல்லாணி: திருப்புல்லாணி, சேதுக்கரை, பஞ்சந்தாங்கி, தினைக்குளம், ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, பத்திராதரவை, நைனாமரைக்கான் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன.தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பழுப்பு மட்டையில் இருந்து தென்னந்தட்டிகள் மற்றும் கிடுகுகள் தயாரிப்பதில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சந்தாங்கி பால்ராஜ், முனியம்மாள் ஆகியோர் கூறியதாவது:தென்னந்தோப்புகளில் மட்டையை ரூ.2 விலைக்கு வாங்குகிறோம். நாள் முழுவதும் தென்ன மட்டையை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் மூன்று மட்டை மற்றும் மற்றொரு மட்டையின் பாதி ஆகியவற்றை முடிந்து பின்ன வேண்டும்.மேலும் 6 அடி 5 அடி அகலத்தில் பின்னப்படும் தென்னந்தட்டிகள் விற்பனைக்காக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், உள்ளிட்ட பகுதிகளுக்கும் ராமநாதபுரம் நகரின் பல பகுதிகளுக்கும் வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் கோயில் விழாக்களில் தென்னந்தட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.முன்பு தென்னந்தட்டிகள் மற்றும் கிடுகுகளின் பயன்பாடு அதிகம் இருந்த நிலையில் சாமியானா பந்தல், பிளாஸ்டிக் பந்தல் உள்ளிட்ட பல வகையான நவீன தொழில்நுட்ப பந்தல்களால் இத்தொழில் சற்று முடங்கியுள்ளது. செயற்கைக்கு மாற்றாக இயற்கையான முறையில் அமைக்கப்படும் தென்னந்தட்டிகளுக்கு எப்போதும் மவுசு உள்ளது.தென்னந்தட்டி ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யப்படுகிறது, ஒரு நாளைக்கு ஐந்து தட்டிகள் முடைய முடிகிறது, உழைப்பு அதிகம், ஊதியம் குறைவு என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி