உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் குறைவு

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் குறைவு

வட்டார மருத்துவ அலுவலர் குற்றச்சாட்டு ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவில் தனியார் ஸ்கேன் சென்டர்களில் பாலினத்தை தெரிவிப்பதால் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் குறைந்து வருவதாக ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி குற்றம் சாட்டினார்.ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் ராதிகா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.மங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் குறைந்து வருகிறது.இதற்கு இங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டர்கள் காரணமாக உள்ளதால் கிராமங்களில் கருவுற்ற பெண்கள் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ பணியாளர்களிடம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அவர் பேசியதாவது:ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆண், பெண்பாலின விகிதம் குறைந்துள்ளது.அதாவது பெண் குழந்தைகள் பிறப்பு இன்றி ஆண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் நிலை இப்பகுதியில் உள்ளது.இந்நிலைக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள சில தனியார் ஸ்கேன் சென்டர்கள் பாலினம் குறித்து தெரியப்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.இதனால் தான் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம். எனவே மன்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கருவுற்றவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மருத்துவ பணியாளர்கள் அவர்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். பாலின பிறப்பு விகிதத்தை சமன் செய்ய முடியும். எனவே, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ