உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அஞ்சுகோட்டை கண்மாயில் மான், மயில்கள் அதிகரிப்பு

அஞ்சுகோட்டை கண்மாயில் மான், மயில்கள் அதிகரிப்பு

திருவாடானை, : திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கண்மாயில் மான், மயில்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய கண்மாயாக அஞ்சுகோட்டை கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் மான், மயில்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.செங்கமடை சுந்தரபாண்டியன் கூறியதாவது:கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த எண்ணிக்கையில் மான்கள் காணப்பட்டன. தற்போது மான்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.திருவாடானையிலிருந்து செங்கமடை செல்லும் வழியில் கண்மாய்க்கரை மேல் ஏறி நின்று பார்த்தால் நீண்ட துாரத்தில் மான்கள் கூட்டமாக மேய்வதை பார்க்கலாம்.அதே போல் மயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவ்வப்போது மான்கள் கண்மாயை விட்டு வெளியேறும் போது வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. மான் வேட்டையாடும் சம்பவங்களும் நடக்கிறது. நாய்களும் விரட்டி கடிக்கின்றன. மான், மயில்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை