உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த அனைத்து ஓய்வூதியர்கள் மூத்த குடிமக்கள் நலச்சங்க கூட்டத்தில் 70வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் வலியுறுத்தினர்.ராமநாதபுர மாவட்ட அனைத்து ஓய்வூதியர்கள், மூத்த குடிமக்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் தலைவர் ராமச்சந்திரன்தலைமையில் நடந்தது. பொருளாளர் முருகேசன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். சங்க செயல்பாடு குறித்து செயலாளர் நாகரரெத்தினம் பேசினார். நிர்வாகிகள் ஜேசுராஜ், சவுந்திரபாண்டியன் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும். பண்டிகை முன் பணம் 4 ஆயிரம் ரூபாய் என்பதை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு நிறுவனம் ஓய்வூதியர்கள் செலவிடும் மருத்துவ செலவு முழுவதையும் காப்பீடு திட்டத்தில் முழுமையாக வழங்க வேண்டும். எப்.எஸ்.எப். ஐ., ரூ.50 ஆயிரத்தை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ