உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

பரமக்குடி: பரமக்குடி அரசு ஐ.டி.ஐ.,ல் சேர மாணவர்களுக்கு ஜூலை 31 வரை காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி அரசு ஐ.டி.ஐ.,ல் 2024ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூலை 1 முதல் 15 வரை நடந்தது. இதில் எலக்ட்ரீசியன், கம்மியர் மோட்டார் வாகன பிரிவு நிறைவடைந்துள்ளது.மேலும் ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகள் அனைத்தும் 50 சதவீதம் வரை நிரப்பப்படாமல் இருக்கிறது. தொழில் துறையில் விருப்பமுள்ள மாணவர்கள் 8, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 14 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் சேரலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.ஐ.டி.ஐ., வரும் போது மாணவர்கள் அனைத்து வகை ஆவணங்களுடன் வர வேண்டும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் கல்வி உதவித்தொகை ரூ.750, விலையில்லா லேப்டாப், சைக்கிள், சீருடைகள்,வரைபட கருவிகள் வழங்கப்படுகிறது.மேலும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும் என முதல்வர் வாளையானந்தம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை