உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 18ம்படி கருப்பண்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

18ம்படி கருப்பண்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி புதுநகரில் நுாதன பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு ஜூலை 5 ல் புனித தீர்த்தங்கள் குடங்களில் நிரப்பப்பட்டு யாகசாலை பூஜை 3 நாட்கள் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு தீர்த்த குடங்கள் புறப்பாடாகியது. காலை 10:00 மணிக்கு 18 அடி உயர 18ம் படி கருப்பண்ணசுவாமி அபிஷேகம் நடத்தப்பட்டது. அலங்காரத்தில் தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வெள்ளைக்குதிரை குடும்பத்தார் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ