உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எப்போது விடிவு காலம் பிறக்கும் வாடகை கட்டடம் தான் கதியா

எப்போது விடிவு காலம் பிறக்கும் வாடகை கட்டடம் தான் கதியா

முதுகுளத்துார்,- முதுகுளத்துார்--கமுதி ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே தனியார் வாடகை கட்டடத்தில் பல ஆண்டுகளாக வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில் எப்போது இதற்கு விடிவு காலம் பிறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.முதுகுளத்துார்--கமுதி ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே வட்டார கல்வி அலுவலகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டது. முறையான பராமரிப்பு பணி செய்யப்படாததால் கட்டடங்கள் சேதமடைந்தும் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு மாறியது.இதனால் ஆசிரியர்கள் பணியாளர்கள் நலன் கருதி வட்டார கல்வி அலுவலகம் அருகில் வாடகை கட்டடத்தில் தற்போது வரை செயல்படுகிறது. இங்கு போதுமான இட வசதி இல்லாததால் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்படுவதால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.வட்டார கல்வி அலுவலகத்திற்கு என்று தனி கட்டடம் எப்போது கிடைக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். பழைய கட்டடம் தற்போது வரை இடிக்கப்படாமல் உள்ளது. எனவே இங்கு தினந்தோறும் பல்வேறு பணிக்காக முதுகுளத்துார் வட்டாரத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர்.எனவே வட்டார கல்வி அலுவலகத்திற்கு தனியாக அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி