உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரங்காடு கடற்கரையில் கொடுவா மீன் பிடிப்பு   

காரங்காடு கடற்கரையில் கொடுவா மீன் பிடிப்பு   

தொண்டி : சென்னை மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் மத்திய உயிரியல் தொழில் நுட்ப துறை நிதி உதவியுடன் தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இங்கு கொடுவா மீன், உவர்நீர் சிப்பி மற்றும் கடற்பாசி முதற்கட்டமாக அறுவடை செய்யப்பட்டது. இதில் 60 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இத் திட்டத்தின் இணை அலுவலர் ஜெயபவித்ரன் அறுவடை மற்றும் சந்தை படுத்துதல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். ஊராட்சி தலைவர் கார்மேல் மேரி கிராமத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி