உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆதி பெரியாண்டவருக்கு இன்று கும்பாபிஷேகம்

ஆதி பெரியாண்டவருக்கு இன்று கும்பாபிஷேகம்

கீழக்கரை: -கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டாலை மேலக்கரை கிராமத்தில் உள்ள ஆதி பெரியாண்டவர், அப்பண்டவர் கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. நேற்று மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை, புண்ணியாவஜனம், வாஸ்து சாந்தியுடன் முதல் கால யாகசாலை பூஜை ஆரம்பமானது.இரவில் எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவைகளும் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பாலிகா பூஜை, கோ பூஜை உள்ளிட்டவைகளும் காலை 10:00 மணிக்கு கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் மற்றும் தொண்டாலை மேலக்கரை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி