உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தரமற்ற பழ ஜூஸ் விற்பனை கண்காணிப்பு அவசியம்

தரமற்ற பழ ஜூஸ் விற்பனை கண்காணிப்பு அவசியம்

தொண்டி: கோடை கால விற்பனையை பயன்படுத்தி தரமற்ற குளிர் பானங்கள், பழ ஜூஸ்கள் விற்பனை அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறையினர் கண்காணிக்க வேண்டும்.கோடை காலம் துவங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலை பயன்படுத்தி குளிர்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சில குளிர்பான கடைகளில் தரமற்ற பழ ஜூஸ் எனும் பெயரில் தரமற்ற பழங்களை கூடுதல் இனிப்பு சுவை பயன்படுத்தி விற்பனை செய்கின்றனர். தொண்டி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாங்கீர், ஆரஞ்ச், ஆப்பிள், தர்பூசணி போன்ற பல்வேறு வகை ஜூஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இனிப்பிற்காக சாக்ரின் மற்றும் தடை செய்யபட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. சாலையோர கடைகளிலும் இம்மாதிரி விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இது போன்றவற்றை வெயில் தாக்கத்தில் இருந்து வாங்கி குடித்துவிட்டு சளி, இருமல், வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகளுக்கு ஆளாகின்றனர். உணவு பாதுகாப்புத்துறையினர் தொடர் சோதனை செய்து தரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை