உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பருவமழை முன்னெச்சரிக்கை; சீரமைப்பு பணிகள் தீவிரம்

பருவமழை முன்னெச்சரிக்கை; சீரமைப்பு பணிகள் தீவிரம்

கமுதி : கமுதி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள், ரோடுகள், வரத்து கால்வாய்களில் மழைநீர் சீராக செல்வதற்கான பணிகளில் நெடுஞ்சாலைத்துறையினர்​ ஈடுபட்டுள்ளனர்​.கமுதி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பகுதிகளில் உள்ள ரோடுகள், வரத்து கால்வாய்கள், சிறுபாலங்கள் உள்ளிட்ட பகுதியில் சீமைக்கருவேல மரங்கள், மணல் மேடாகி இருப்பதால் மழைநீர் செல்ல வழியின்றி ரோட்டோரத்தில் தேங்கி வீணாகிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ரோட்டோரத்தில் உள்ள சீமைக்கருவேலம் மரங்கள், செடிகள், பட்டுப்போன மரங்களை அகற்றி வருகின்றனர். பள்ளங்களை சீரமைப்பதும், நீர்வரத்து பகுதியில் உள்ள செடிகள், மணல்மேடுகள் சீரமைக்கப்படுகிறது. பாலத்தின் குழாய்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், சுவர்களில் வர்ணம் பூசுகின்றனர்.உதவி கோட்டப் பொறியாளர் சக்திவேல் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சாலை போக்குவரத்து சீராக நடைபெறவும், அனைத்து பாலங்களில் அடைப்பை நீக்கி தண்ணீர் சொல்ல முறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் கமுதி நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாலங்கள் மற்றும் ரோடுகள் சீரமைக்கும் பணி நடக்கிறது.மேலும் மணல் மூடைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது என்றார். பணிகளை இளநிலை பொறியாளர் முருகன் உட்பட நெடுஞ்சாலைத்துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை