உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கச்சத்தீவு கண்டிப்பாக மீட்கப்படும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உறுதி

கச்சத்தீவு கண்டிப்பாக மீட்கப்படும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உறுதி

முதுகுளத்துார், : முதுகுளத்துாரில் நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.வேட்பாளர் சந்திரபிரபா தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் அலங்கை வினோத், இளைஞர் பாசறை சுடலைராஜன் முன்னிலை வகித்தனர்.இதில், வேட்பாளர் சந்திரபிரபா பேசியதாவது, ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பஸ்,குடிநீர், சாலை உட்பட அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. கச்சத்தீவு கண்டிப்பாக மீட்கப்படும். ஹைட்ரோ கார்பன் திட்டம், ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன் என்றார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ