உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப்பள்ளிகளில் மாஸ் கிளீனிங் ஜூன் 3-5 வரை நடத்த உத்தரவு 

அரசுப்பள்ளிகளில் மாஸ் கிளீனிங் ஜூன் 3-5 வரை நடத்த உத்தரவு 

ராமநாதபுரம், - தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ல் திறக்கப்பட உள்ளதால் ஜூன் 3, 4, 5 ஆகியநாட்களில் சமையல் கூடம், வகுப்பறைகள், கழிப்பறைகளின் துாய்மையை உறுதி செய்ய 'மாஸ் கிளீனிங்' மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தலைமையாசிரியர்களைஅறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிமாணவர்களுக்கு ஏப்.24 முதல் கோடை விடுமுறைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் ஜூன் 6ல் அனைத்துப்பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜூன் 3, 4, 5 ல் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 'மாஸ் கிளீனிங்' நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தபள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் கூறியதாவது:அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறை, சத்துணவு தயாரிக்கும் சமையல் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை ஆகிய இடங்களில் துாய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளைமாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் கண்காணிக்க உள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை