உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பங்குனி உத்திரம்பால்குட ஊர்வலம்

பங்குனி உத்திரம்பால்குட ஊர்வலம்

கமுதி, : கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா நடந்தது.பத்து நாட்களுக்கு முன் காப்பு கட்டி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் முருகனுக்கு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. திருச்செந்துார் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து சந்தன மாரியம்மன், சவுண்டீஸ்வரி, முத்தாலம்மன், விநாயகர் கோயில் வழியாக ஊர்வலமாக சென்று சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். பின் மூலவரான முருகனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம் நடந்தது.விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர்​ கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி