உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு ஆவணங்களில் மட்டுமே மின்னும் பரமக்குடி மினி விளையாட்டு அரங்கம்

அரசு ஆவணங்களில் மட்டுமே மின்னும் பரமக்குடி மினி விளையாட்டு அரங்கம்

பரமக்குடி : பரமக்குடி மினி விளையாட்டு அரங்கம் 17 ஆண்டுளாக அரசு ஆவணங்களில் மட்டுமே உள்ளது. போதிய வசதிகள் இன்றி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பயிற்சி மேற்கொள்ள இடவசதியின்றி உள்ளது. வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மைதானத்தை சீரமைக்க வேண்டும்.பரமக்குடி நகராட்சி சந்தை திடலில் 5 ஏக்கரில் 2007ம் ஆண்டு ரூ.30 லட்சத்தில் மினி விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட்ட அரங்கத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இங்கு அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து பெயரளவிலேயே தற்போது போட்டிகள் நடக்கும் சூழல் உள்ளது. சிறு மழை பெய்தாலும் அரங்கத்தின் தடகளப்பாதை முழுவதும் நீர் நிரம்பி குளமாகிவிடுகிறது. வீரர்கள் தங்கும் அறை, கழிப்பறை வீணாகி உள்ளது. பல லட்சங்கள் செலவு செய்து அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து 'கேட்' காணாமல் போய்விட்டது. இந்நிலையில் பள்ளி, கல்லுாரி விளையாட்டு ஆர்வலர்கள், போலீசார், ராணுவம் போன்ற துறைகளுக்கு செல்லும் இளைஞர்கள் பயிற்சி மேற்கொள்ள இடவசதியின்றி உள்ளது. ஆனால் பரமக்குடியில் மினி விளையாட்டு அரங்கம் உள்ளதாக அரசு ஆவணங்களில் மட்டும் ஜொலிக்கும் சூழலில் கடந்த ஆண்டு ராமநாதபுரம், முதுகுளத்துாருக்கு ரூ.3 கோடியில் அரங்கம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியது. எனவே மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம் பரமக்குடி அரங்கின் நிலையை கவனத்தில் கொண்டு, வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை