மேலும் செய்திகள்
தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அச்சம்
20 hour(s) ago
இலவச மருத்துவ முகாம்
20 hour(s) ago
கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி
20 hour(s) ago
இன்று புதிய வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
20 hour(s) ago
பரமக்குடி : பரமக்குடி - மதுரை நான்கு வழிச் சாலை சென்டர் மீடியனில் ஆங்காங்கே செடிகள் கருகிய நிலையில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புனித தலத்தை மையமாக வைத்து மதுரையிலிருந்து நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.மதுரையிலிருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாகவும், அதனை தொடர்ந்து இருவழிச் சாலையாகவும் இருக்கிறது.இந்நிலையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட போது சென்டர் மீடியன் பகுதியில் அரளிச்செடிகள் அடர்த்தியாக வளர்க்கப்பட்டன. இதனால் எதிர் எதிரில் இருபுறங்களிலும் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் வெளிச்சம் வாகன ஓட்டிகள் கண்களில் படாமல் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் சில மாதங்களாக ஆங்காங்கே பல இடங்களில் அரளிச்செடிகள் கருகிய நிலையில் ஒட்டுமொத்தமாக கட்டாந்தரையாகியுள்ளது. இதனால் இருபுறமும் இரவு நேரங்களில் ஹெட்லைட் வெளிச்சம் அதிகளவில் உள்ளதால் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது.பல நேரங்களில் சென்டர் மீடியன் தடுப்புச் சுவர்களில் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. ஆகவே கருகிய அரளிச் செடிகளை மீண்டும் புதிதாக நட்டு வளர்க்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago