உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கை

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கை

பரமக்குடி: பரமக்குடியில் தமிழ்நாடு கல்வித் தகுதி உள்ள சிறப்பாசிரியர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சிவகுமாரசாமி முன்னிலை வகித்தார். கவுரவ தலைவர் ஜெய கணேசன் வரவேற்றார். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்வித் தகுதி இல்லாமல் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களால் முறையான கல்வித் தகுதி உள்ளவர்கள் 13 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆகவே இவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு தமிழக அரசு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என்றனர். மேலும் 2016ல் முதல்வர் கருணாநிதி மற்றும் 2021ல் முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.எனவே ஜூன் 20ல் நடக்கும் சட்டசபை கூட்டத் தொடரில் பணி நிரந்தரம் அறிவிப்பை வெளியிட வேண்டுமென வலியுறுத்தினர். இதில் மாநில செயலாளர் சந்திரலேகா, பொருளாளர் பகவதி வெற்றி ராஜா பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் பத்மநாபன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி