உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடற்கரை கால்பந்து, கையுந்து போட்டியில் பங்கேற்கலாம்

கடற்கரை கால்பந்து, கையுந்து போட்டியில் பங்கேற்கலாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரியமான் கடற்கரையில் ஜூன் 15 முதல் 17 வரை ஆண்களுக்கான கடற்கரை கையுந்துப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் நடக்கிறது. விருப்பமுள்ள அணியினர் முன்பதிவு செய்து பங்கேற்கலாம்.மாவட்டத்தை சார்ந்த அனைத்து கையுந்துப்பந்து மற்றும் கால்பந்து அணிகள் பதிவு செய்து பங்கேற்கலாம். கையுந்துப்பந்து போட்டிக்கு 81482 07197, கால்பந்து போட்டிக்கு 95853 62990 ஆகிய அலைபேசி எண்ணிகளில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். நேரடி பதிவு ஏற்கப்பட மாட்டாது.இன்று (ஜூன் 13) மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். முதலில் வரும் 30 அணிகள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். வெற்றி பெரும் அணிக்கு பரிசு கோப்பை, ரொக்கத் தொகை வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை