உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாய்ந்து ஆபத்தான நிலையில் மின்கம்பத்தால் மக்கள் அச்சம்

சாய்ந்து ஆபத்தான நிலையில் மின்கம்பத்தால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார்--சிக்கல் ரோடு இளஞ்செம்பூர்அருகே சாலையோரத்தில் சாய்ந்து ஆபத்தானநிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடலாடி துணை மின் நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. முதுகுளத்துார்-சிக்கல் ரோடு இளஞ்செம்பூர் கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் அமைக்கப்பட்டு உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது.தற்போது இளஞ்செம்பூர் கண்மாய்கரை அருகே மின் கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை