| ADDED : மே 18, 2024 04:40 AM
ராமநாதபுரம்,: ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோடு அருகே ஏட்டைய்யா தெருவில் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர்.ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொடர் பராமரிப்பு இல்லாததால் குழாய்கள் சேதமடைந்தும், அடைப்புகள் காரணமாக கழிவுநீர் மெயின் ரோடு, தெருக்களில் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. குறிப்பாக ரயில்வே பீடர் ரோடு அருகேயுள்ள ஏட்டைய்யா தெருவில் பல மாதங்களாக 'மேன்ஹோல்' அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. துர்நாற்றத்தால் ஜன்னல், கதவுகளை திறந்து வைக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகிய தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக நகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்றி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.--