உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாலுகா அலுவலகத்தில் குவிந்த மக்கள்

தாலுகா அலுவலகத்தில் குவிந்த மக்கள்

கடலாடி : இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி நேற்று கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.வாலிநோக்கத்தில் மீனவர் தெரு மற்றும் சாத்தார் கோயில் பகுதியில் வசிக்கும் 100 குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை.மார்க்சிஸ்ட் கடலாடி தாலுகா செயலாளர் அம்ஜத்கான் தலைமையில் கடலாடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முருகேசனை சந்தித்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஒவ்வொருவரும் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர்.கடலாடி கிழக்கு கமிட்டி நிர்வாகிகள் பச்சமால், நம்புராஜன், ராமசாமி உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர். முதல்வரின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை