மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
12 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
12 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
12 hour(s) ago
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதி மீறி அள்ளினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் அமர்நாத் கூறினார். அவர் கூறியதாவது:பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சிதுறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண், கிராவல், மண் போன்ற சிறு கனிமங்களை துார்வாரி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.திருவாடானை தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட கண்மாய்களிலும், 100க்கும் மேற்பட்ட ஊருணிகளிலும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விவசாயிகள் அரசிதழில் வெளியிட்டுள்ள ஆணைப்படி எடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பதாரர்கள் தங்கள் மனுக்களை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் இல்லாத காலங்களில் மட்டும் தான் மண் எடுக்க வேண்டும். ஒரே இடத்தில் அள்ளாமல் பரவலாக அள்ள வேண்டும்.மண்ணை வெட்டி எடுக்கும் போது தரையின் மட்டம் கண்மாயில் உள்ள மடையின் அடி மட்டத்திற்கு கீழ் சென்றுவிடக்கூடாது.வாகனங்கள் செல்லுவதற்கு முடியாத அளவில் கரையை வெட்டக்கூடாது. கலுங்கு, மதகுகளுக்கு சேதம் ஏற்பட்டுவிடக் கூடாது.ஊருணிகளில் இயற்கை தன்மை பாதிக்கக்கூடாது. விதி மீறல் செய்து மண் அள்ளினால் மனுதாரர் மீது கனிம விதிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago