உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை சிவன் கோயிலில் உழவார பணி

திருவாடானை சிவன் கோயிலில் உழவார பணி

திருவாடானை, : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சேலம், மதுரையை சேர்ந்த சிவனடியார்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று சேலம் திருஅருணை உழவார் திருக்கூட்டம், மதுரை வில்லாபுரம் திருக்கோயில் திருத்தொண்டர்கள் உழவார பணியில் ஈடுபட்டனர். காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு, சுற்றுச்சுவரை சுத்தம் செய்தல், கொடிமரம், விளக்குகள், பூஜை பொருட்கள், பிரகாரம், சுவாமியின் வாகனங்கள், வஸ்திரங்கள் சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாலையில் சன்னதியில் கூட்டு வழிபாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் பிரகாரத்தில் மரக்கன்றுகள் நடபட்டது. சிவனடியார்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் மாதந்தோறும் ஒரு சிவன் கோயிலை தேர்ந்தெடுத்து இப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இப்பணி மனநிறைவாக உள்ளது. திருவாடானை கோயிலில் நான்காவது முறையாக இப்பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி