உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆற்றாங்கரை பகுதி கடலில்  குளித்த பிளஸ் 2 மாணவர் பலி 

ஆற்றாங்கரை பகுதி கடலில்  குளித்த பிளஸ் 2 மாணவர் பலி 

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தை சேர்ந்த பிளஸ் -2 மாணவர் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ஆற்றாங்கரை கடலில் அலையில் சிக்கி பலியானார்.ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் அமிர்தா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கல்யாண்குமார். இவர் முகமது சதக் தஸ்கீர் பள்ளியில் நிர்வாக அலுவலராக உள்ளார். இவரது மகன் ஹர்ஷத் 17. இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் ஆற்றாங்கரை கடலில் குளிப்பதற்காக சென்றார். அங்கு அலையில் சிக்கி பலியானார். அவரது உடலை மீட்டு மண்டபம் மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை