உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அஞ்சலகத்தில் காப்பீடு   இழப்பீடு வழங்கல்

அஞ்சலகத்தில் காப்பீடு   இழப்பீடு வழங்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அஞ்சலகத்தில் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ராமநாதபுரத்தில் அஞ்சலகத்துறை, டாடா ஜெனரல் காப்பீடு நிறுவனம் சார்பில், ரூ. 520, ரூ.320 விபத்துக்காப்பீடு திட்டம் 2021ல் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் விபத்துக்காப்பீடு, ரூ.1 லட்சம் வரை விபத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள் போன்ற பலன்களை பெற முடியும். ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தீர்த்தாரப்பன் இறந்த வாடிக்கையாளர் தம்பி விக்னேஷ்வரனிடம்ரூ.5 லட்சமும், விபத்தில் சிக்கிய முரளி என்பவருக்கு ரூ.67 ஆயிரம், அஜித்குமாருக்கு ரூ.60 ஆயிரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மேலாளர் அக்ஷய் ஆஷிஸ், டாடா ஜெனரல் இன்சூரன்ஸ் மேலாளர் கோமதிராஜா பங்கேற்றனர்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை