உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மாவட்டத்தில் அலுவலகங்கள், பள்ளி கல்லுாரிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் தியாகிகள் குடும்பத்தினர் கவுரவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அலுவலகங்கள், பள்ளி கல்லுாரிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் தியாகிகள் குடும்பத்தினர் கவுரவிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரத்தில் நடந்த விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கவுரவப்படுத்தினார்.ராமநாதபுரம் தினமலர் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றப்பட்டு சுதந்திர விழா கொண்டாடப்பட்டது. உறுதிமொழி எடுக்கப்பட்டது. ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தல் சுதந்திர தின விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக்கொடி ஏற்றி போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். முன்னதாக தேச ஒற்றுமை, சமதானம், அமைதியை வலியுறுத்தி புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். சிறப்பாக பணிபுரிந்த 72 போலீசார், மருத்துவம், சுகாதாரத்துறை, காவல் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 195 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்வி உதவித்தொகை, முதல்வர் நிவாரண நிதி, இலவச தையல் இயந்திரங்கள் உட்பட அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் 84 பேருக்கு ரூ.1 கோடியே 67 ஆயிரத்து 499 மதிப்பில் வழங்கப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அபிநவ்குமார், எஸ்.பி.,சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர், மாவட்ட வன அலுவலர் ேஹமலதா, சப்-கலெக்டர் அபிலஷா கவுர், உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பன், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* அரசு, தனியார் அலுவலகங்களில் விழா: ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு தேசிய கொடியேற்றினார். நீதிபதிகள், அலுவலர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கொடியேற்றினார். ரேஞ்சர்கள், பாரஸ்டர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., சந்தீஷ் கொடியேற்றினார். அமைச்சுகப் பணியாளர்கள், போலீசார் பங்கேற்றனர். ராமநாதபுரம் டி-பிளாக் அன்னை சத்தியா அம்மாள் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட சட்டப்பணிக்குழு சார்பில் சுதந்திர தின விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதபதி குமரகுரு தலைமை வகித்தார். மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, இனிப்பு வழங்கப்பட்டது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபத உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதிபதி மோகன்ராம், சார்பு நீதிபதி அகிலா தேவி, கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஸ்டா, இல்ல ஊழியர்கள் பங்கேற்றனர்.ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் கார்மேகம் கொடியேற்றினார். கமிஷனர் அஜிதா பர்வின் முன்னிலை வகித்தார். துணை தலைவர் பிரவீன் தங்கம், கவுன்சிலர்கள், அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் பா.ஜ., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் கொடியேற்றினார். மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு சார்பில் நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கினர். நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின், ரோட்டரி தலைவர் ஜெகதீஷ், செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, பொறியாளர் காந்தி, வெங்கடசுப்பு, ரமேஷ்பாபு, பொறியாளர் ரத்னவேல் பங்கேற்றனர்.* பள்ளி, கல்லுாரிகளில் விழா: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா கொடியேற்றினார். முதல்வர் பெரியசாமி முன்னிலை வகித்தார். போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் சத்தியா ஏற்பாடுகளை செய்தார்.ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மூத்த பேராசிரியர் காசிநாததுரை தலைமை வகித்தார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் சானாஸ் பாரூக் கொடியேற்றினார். முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி முன்னிலை வகித்தனர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் வள்ளி விநாயகம், நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் சிங்காரதோப்பு சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் தாளாளர் மனோகரன் மார்ட்டின் கொடியேற்றினார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ராமநாதபுரம் நகராட்சி அறிஞர் அண்ணாதுரை நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்றார். நகராட்சி தலைவர் கார்மேகம் கொடியேற்றினார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள், பட்டதாரி ஆசிரியர் குனசேகரன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா தலைவர் முகமது தவுபீக் கரீம் தலைமை வகித்து கொடியேற்றினார். ஆரம்ப பள்ளிகளின் ஆயுட்கால தலைவர் முகமது யூசப், சித்தார் கோட்டை ஊராட்சி தலைவர் முஸ்தரி ஜஹான், முகம்மதியா பள்ளிகளின் தாளாளர் சாகுல் ஹமீது கனி, செயலர் சாகுல் ஹமீது, தலைமை யாசிரியர்கள் ஜவஹர் அலி, ஆரம்ப பள்ளி தலைமை யாசிரியர் சாஜிதா பானு பங்கேற்றனர். தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை யாசிரியர் டேவிட் மோசஸ் தலைமை வகித்தார். ஹாஜி கமால் பாட்ஷா நினைவாக மலேசியா டி.எம்.ஒய்., குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் பீர் முகமது, உதவித்தொகை ரூ.88 ஆயிரம் வழங்கினர். பள்ளி புரவலர் முகமது ரபிக், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.*ராமேஸ்வரம் கோயிலில் பொது விருந்து:-சுதந்திர தின விழாவையொட்டி நேற்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், கோயில் ஊழயர்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் அன்னதானக் கூடத்தில் பொது விருந்து நடந்தது. ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி,கோயில் ஆய்வாளர் பிரபாகரன், பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன் பங்கேற்றனர்.ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தாசில்தார் செல்லப்பா தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். ராமேஸ்வரம் கோயில் அலுவலகத்தில் செக்யூரிட்டி அலுவலர் ஜெயராமன், பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோயில் மேலாளர் மாரியப்பன் கொடியேற்றினர்.ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் நாசர்கான், தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர்கள் குயின்மேரி, அகிலா பேட்ரிக் கொடியேற்றினர்.* முதுகுளத்துார் பகுதி:முதுகுளத்துாரில் தாமரை தொண்டு நிறுவனம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொண்டு நிறுவன பொறுப்பாளர் சகுந்தலா முன்னிலை வகித்தார். அப்போது டி.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், போஸ்ட் ஆபிஸ்​ உட்பட பள்ளிகளுக்கு தேசிய கொடி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. துாரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு டேபிள், ஆத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இனிப்புகள், நோட் உட்பட ஸ்டேஷனரி பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.முதுகுளத்துாரில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அலுவலகத்தில் தர்மர் எம்.பி., தேசியக்கொடி ஏற்றினார். முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்கள் ஜானகி, அன்புக்கண்ணன் தலைமையில் ஒன்றியத் தலைவர் சண்முகபிரியா தேசியக் கொடி ஏற்றினார்.முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் ஷாஜகான் தேசியக் கொடி ஏற்றினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சடையாண்டி கொடி ஏற்றினார். முதுகுளத்துார் டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் டி.எஸ்.பி., சின்னகண்ணு கொடி ஏற்றினர்.முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் நாகரஞ்சித் கொடியேற்றினார். தலைமை செவிலியர்கள் சண்முகவள்ளி, இளங்கோவன் முன்னிலை வகித்தனர். கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார டாக்டர் நெப்போலியன் கொடி ஏற்றினார்.அரப்போது ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சரஸ்வதி, பொன்னக்கனேரி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சத்யபிரியா, தேரிருவேலி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் அபூபக்கர் சித்திக், நல்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் தங்கபாண்டியன், அலங்கானுார் ஊராட்சியில் தலைவர் வினோத்குமார் கொடியேற்றினர்.சாத்தனுார் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் அழகம்மாள், ஆனைசேரி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் முருகவேல், ஆதனக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைவர் ராமலட்சுமி, ஆத்திகுளம் ஊராட்சியில் ஆனந்த நாயகி, ஆதங்கொத்தங்குடி ஊராட்சியில் தலைவர் கதிரேசன், காத்தாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைவர் இந்திராகாந்தி கொடியேற்றினர்.கீழக்காஞ்சிராங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைவர் சண்முகவள்ளி, கீழக்கொடுமலுார் ஊராட்சியில் தலைவர் ரதமணி, கீழக்குளம் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் ரவிச்சந்திரன், கொளுந்துரை ஊராட்சி அலுவலகத்தில் தஸ்ரின் பானு, மேலக்கொடுமலுார் ஊராட்சி அலுவலகத்தில் சரவணன், புளியங்குடி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் இந்துமதி கொடியேற்றினர்.சிறுதலை ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் செல்வி, வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் தலைவர் செந்தில்குமார், விளக்கனேந்தல் ஊராட்சியில் தலைவர் சண்முகவள்ளி, விளங்குளத்துார் ஊராட்சியில் தலைவர் கனகவள்ளி, குமாரகுறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் செந்தில் கொடியேற்றினர்.பொசுக்குடி ஊராட்சியில் துணை தலைவர் முருகன், செல்வநாயகபுரம் ஊராட்சியில் தலைவர் பால்சாமி, கீரனுார் ஊராட்சியில் ஜோதி, சித்திரக்குடி ஊராட்சியில் தலைவர் கண்ணன், மேலச்சிறுபோது ஊராட்சியில் சம்சத் பேகம் தேசியக் கொடி ஏற்றினர்.முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோசப் விக்டோரியா ராணி தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராணி தேசியக் கொடி ஏற்றினார். பள்ளிக்கு சேதுசீமை பட்டாளம் உறுப்பினர்கள் மின்விசிறி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. துாரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து தேசியக் கொடி ஏற்றினர்.முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமர் தலைமையில் தலைமைஆசிரியர் சந்தனவேல் கொடி ஏற்றினார். அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் காந்திராசு கொடி ஏற்றினார்​.கவினா சி.பி.எஸ்.இ., பள்ளியில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தலைவர் கண்ணதாசன் பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார். முதல்வர் காஞ்சனா வரவேற்றார். மாணவர்கள் சார்பில் சிலம்பம், ட்ரில்,பிரமிடுகள்,சாகசங்கள் நடத்தினர். இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஆரோக்கியமேரி தலைமையில் ஊராட்சி தலைவர் பொற்கொடி கொடி ஏற்றினார். ஏ.எம்.டி., அறக்கட்டளை துவக்க விழாவை முன்னிட்டு நடிகர் அருண்மொழித்தேவன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மரக்கன்று நட்டார்.முதுகுளத்துாரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கம் சார்பில் கேப்டன் செந்துார்பாண்டியன் தேசியக் கொடி ஏற்றினார். தலைவர் கண்ணன், செயலாளர் வேலு, பொருளாளர் துரைசாமி தலைமை வகித்தனர். முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.முதுகுளத்துார் காந்தி சிலை அருகே காங்., கட்சி சார்பில் வட்டார தலைவர்கள்​ராமர், புவனேஸ்வரன் சுரேஷ் காந்தி நகர் தலைவர் சாகுல் ஹமீது முன்னிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம் தேசியக் கொடி ஏற்றினர். முதுகுளத்துாரில் த.மு.மு.க., மற்றும் ம.ம.க., கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் காதர் முகைதீன் தேசியக் கொடி ஏற்றினார்.முதுகுளத்துார் சோனைமீனாள் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் கோவிந்தராஜன் தலைமையில் தாளாளர் ரெங்கநாதன் தேசியக் கொடி ஏற்றினார். முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல்வர் பாண்டிமாதேவி கொடி ஏற்றினார்.விளங்குளத்தூர் பசும்குடில் ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் காப்பகத்தில் செயலாளர் சின்னமருது தேசியக்கொடி ஏற்றினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.*ஆர்.எஸ்,மங்கலம் பகுதி:ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வரதராஜன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் தலைவர் ராதிகா கொடியேற்றினார். துணைத் தலைவர் சேகர், பி.டி.ஓ., லெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மலைராஜ் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பாண்டி, வெங்கடாஜலபதி, யோகேஸ்வரன் உட்பட ஊழியர்கள் பங்கேற்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மவுசூரியா கொடியேற்றினார். செயல் அலுவலர் மாலதி உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சரவணன், திருப்பாலைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் கொடியேற்றினர். ஆர்.எஸ்.மங்கலம் வர்த்தக சங்கம் சார்பில் சங்க தலைவர் அயூப்கான் தலைமையில் டாக்டர் செந்தில் நாயகம் கொடியேற்றினார். செயலாளர் வேல்முருகன் உட்பட வர்த்தகர்கள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.மங்கலம் கிருஷ்ண ஜெயந்தி அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை தலைவர் வேல்முருகன் கொடியேற்றினார். செயலாளர் பிரபு, பொருளாளர் விஜயன் கலந்து கொண்டனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பகவதி குமார் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ஜெயபாரதி கொடியேற்றினார். முதுகலை ஆசிரியர் ராஜசேகரன், ஆசிரியர்கள் மெசியானந்தி, தங்கபாண்டியன், சிலம்பரசன், ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.ேஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர் வைரவன் தேசியக் கொடி ஏற்றினார். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கில் பேரூராட்சி கவுன்சிலர் சரண்யா கொடியேற்றினார். ஆசிரியர்கள் பூவலிங்கம், மரியாள், கலாமணி, செல்வராணி பங்கேற்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் ஆண்டனி ஐ.டி.ஐ., மற்றும் காருண்யா நர்சிங் கல்லுாரியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜ் கொடியேற்றினார். தாளாளர் பெஞ்சமின், முதல்வர் வசந்த் சுசில் பங்கேற்றனர். ஆனந்துார் அருகே சாத்தனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆணையர் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் சாத்தனுார் ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி தேசிய கொடி ஏற்றினார். தேவிபட்டினம் அருகே பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை மற்றும் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் சுதந்திர தின கொண்டாடப்பட்டது. பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் அப்துல் வகாப், செயலாளர் தவுலர் பாக்கீர், நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, செயலாளர் கரீயும் கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.*கீழக்கரை பகுதி:கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் சேக் தாவூத் கொடியேற்றினார். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. இனிப்புகள் வழங்கப்பட்டது.கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் முதல்வர் நிர்மல் கண்ணன் தலைமை வகித்து கொடியேற்றினார். அனைத்து துறை தலைவர்கள் பங்கேற்க உறுதிமொழி வாசிக்கப்பட்டது. உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார், பி.ஆர்.ஓ., நஜ்முதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் செகனாஸ் ஆபிதா தேசியக்கொடி ஏற்றினார். துணை சேர்மன் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கணக்காளர் உதயகுமார், பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா பங்கேற்றனர்.கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் ராஜசேகர் கொடியேற்றினார். தகவல் தொடர்புத்துறை தலைவர் மலர் வரவேற்றார். துறைத்தலைவர் சோபனா, மதுமிதா உட்பட பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர். பேராசிரியர் முகமது நஜிமுதீன் நன்றி கூறினார். உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.கீழக்கரையில் நகர் காங்., சார்பில் நடந்த விழாவில் மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்து கொடியேற்றினார். தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சித்திக் ஹுசைன் தேசியக்கொடி ஏற்றினார். நகர் தலைவர் அஜ்மல்கான் வரவேற்றார்.கீழக்கரை மேல்நிலைப் பள்ளியில் பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன் கொடியேற்றினார். பள்ளி ஜமாத் பொருளாளர் செய்யது இப்ராம்ஷா, பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளர் சப்ரஸ் நவாஸ், பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமது ரிஸ்வானா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் ஹானரோரி கவுன்சில் மலையப்பன் நாகலிங்கம் கொடியேற்றினார். முதல்வர் சுமையா வரவேற்றார். ஹிந்தி சொற்பொழிவு நடந்தது. மாணவிகளின் சுதந்திர தின வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.---*பரமக்குடி பகுதி:பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராஜ கோபுரத்தில் ஏற்றினர். பரமக்குடி நகராட்சியில் தலைவர் சேது கருணாநிதி தேசியக் கொடி ஏற்றினார். துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கமிஷனர் முத்துசாமி வரவேற்றார். சுகாதார அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார்.பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் கொடியேற்றினார். சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பரமக்குடி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி., சபரிநாதன், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சாந்தி கொடி ஏற்றினர்.பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் சிந்தாமணி கொடியேற்றினார். பி.டி.ஓ., கருப்பையா முன்னிலை வகித்தார். போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்.எல்.ஏ., முருகேசன் தேசியக் கொடி ஏற்றினார். தலைவர் சத்யா, துணைத் தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தனர். வக்கீல் குணசேகரன் கலந்து கொண்டார். நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் வினிதா கொடியேற்றினார்.பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பிரகாஷ் கொடி ஏற்றினார். கல்வி குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பள்ளி தாளாளர் ரெங்கன், பொருளாளர் பரசுராமன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார்.பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ஜமாத் உதவி செயலாளர் சாதிக் பாட்ஷா தலைமையில் ஹோமியோ டாக்டர் சிவகுமார் தேசியக் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் அஜ்மல் கான் வரவேற்றார். சோமநாதபுரம் சவுராஷ்ட்ரா தேசிய நடுநிலைப்பள்ளியில் தலைவர் ராமய்யன் தலைமை வகித்தார். தாளாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., கேசவராமன் தேசிய கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி வரவேற்றார்.பரமக்குடி மவுன்ட் லிட்ரா ஜூனியர் செகண்டரி பள்ளியில் டி.எம்.பி., வங்கி சீனியர் மேலாளர் ராஜ கண்ணன் கொடியேற்றினார். பள்ளி சேர்மன் பூமிநாதன், செயலாளர் நாகரத்தினம், தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் கலந்து கொண்டனர். பரமக்குடி டி.இ.எல்.சி., ஆரம்ப பள்ளியில் தாளாளர் பாபு தலைமை வகித்து கொடி ஏற்றினார். ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் சங்க தலைவர் இளங்குமரன் கொடியேற்றினார். செயலாளர் சுப்பிரமணியன், சங்க செயலாளர் சுப்பையா, சேர்மன் சவுந்தர நாகேஸ்வரன், தலைமையாசிரியர் சோபனாதேவி கலந்து கொண்டனர்.எமனேஸ்வரம் சவுராஷ்டிரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சபை தலைவர் கோவிந்தன் தலைமை வகித்து கொடி ஏற்றினார். தாளாளர் ரமேஷ் வரவேற்றார். சபை செயலாளர் யோகைய்யன் நன்றி கூறினார்.பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிகுலேஷன் பள்ளியில் கல்விக் குழு தலைவர் போஸ், இணை தலைவர் பாலுசாமி முன்னிலை வகித்தனர். சபை துணை தலைவர் ராதாகிருஷ்ணன் கொடி ஏற்றினார். பள்ளி செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜேஷ் கண்ணன் பங்கேற்றனர்.பரமக்குடி காளிதாஸ் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முரளீதரன் வரவேற்றார். நகராட்சி கவுன்சிலர்கள் துரைசரவணன், முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சக்தி தேசிய கொடி ஏற்றினார்.பரமக்குடி ஆயிர வைசிய பி.எட்., கல்லுாரியில் உப தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கவுரவ செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் டாக்டர் வரதராஜன் கொடி ஏற்றினார். பொருளாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மேனேஜிங் டைரக்டர் முகமது சீனி பாதுஷா தேசியக் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர்கள் ஜெயசுதா, அணில் கலந்து கொண்டனர்.-------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ