உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தை குளிர்வித்த மழைரோட்டில் தேங்கிய நீரால்  அவதி 

ராமநாதபுரத்தை குளிர்வித்த மழைரோட்டில் தேங்கிய நீரால்  அவதி 

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நேற்று காலை மழை பெய்ததால் ரோட்டில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்பட்டனர்.ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப சலனத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். நேற்று காலை 5:00 மணிக்கு நகர், கிராமங்களில் 8:00 மணி வரை இடியுடன் மிதமான மழை பெய்தது. மதுரை ரோட்டில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பியில் விழுந்ததால் காலை 10:00 மணி வரை இரண்டு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.இதே போல் பட்டணம்காத்தான் பகுதியில் 3:00 மணி நேரத்திற்கும் அதிகமாக மின் தடை ஏற்பட்டது.ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்ட் ரோடு, அரண்மனை சந்தை ரோடு, பாரதிநகர், டி-பிளாக் அம்மா பூங்கா, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் டூவீலர்களிலும், நடந்து சென்ற மக்கள் பாதிக்கப்பட்டனர்.பல நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் குளிர்ந்த காற்றை அனுபவித்தாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை