உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ராமானுஜர் 1007வது அவதார உற்ஸவம்

பரமக்குடியில் ராமானுஜர் 1007வது அவதார உற்ஸவம்

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜரின் 1007 வது அவதார உற்ஸவ தின விழா நடந்தது.பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆழ்வார்கள் சன்னதியில் ராமானுஜர் அருள் பாலிக்கிறார். மேலும் உற்ஸவர் திருமேனியும் இக்கோயிலில் எழுந்தருள செய்யப்பட்டுள்ளது.இதன்படி ஸ்ரீபெரும்புதுாரில் ஆசூரி கேசவாச்சாரியாருக்கும், காந்திமதி அம்மையாருக்கும் திருமகனாக ராமானுஜர் கி.பி. 1017ல் பிறந்தார். இவர் திருக்கோஷ்டியூரில் 'ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை உலகறிய செய்தார். நேற்று சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் அவரது 1007வது அவதார தின உற்ஸவம் நடந்தது. இதன்படி நேற்று காலை 8:30 மணி முதல் திருநாமம் சங்கு சக்கர குழுவினரால் ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம், திரு ஆராதனம் நடந்தது.பின்னர் உற்ஸவர் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ