உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல்

ராமேஸ்வரம் : அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.நேற்று ஆவணி அமாவாசையில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர்.பின் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். இதன் பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர்.அக்னி தீர்த்தத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் சுத்திகரித்து நீரை குழாய் மூலம் 200 மீ., துாரத்தில் கடத்தி கடலில் நகராட்சி கலந்தது. ஆனால் நேற்று குழாய் உடைந்து கழிவுநீர் நேரடியாக கலந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தபடி நீராடிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
செப் 03, 2024 00:59

படித்துறையெல்லாம்.ஒரே அழுக்கு. குப்பை. கருப்பு கலரில் கடல் நீர். போற வழியெல்லாம் குப்பை. இங்கே மட்டுமல்ல. திருப்புல்காணி, சேதுக்கரை எல்லாம் இதே கதைதான். பக்தி உணர்ச்சி இருக்கும் அளவுக்கு சுத்த உணர்ச்சியோ, அழகுணர்ச்சியோ இல்லை என்பதே உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை