| ADDED : ஆக 08, 2024 10:53 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம் ரோடு முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.ராமநாதபுரம் நகராட்சி, பட்டணம்காத்தான், சக்கரகோட்டை ஊராட்சி பகுதிகளில் ராமேஸ்வரம் நெடுஞ்சாலையின் இரு புறம் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதுகுறித்த புகாரில் கலெக்டர் சிம்ரன் ஜீத் காலோன் உத்தரவில் நெடுஞ்சாலைத் துறையினர், வருவாய்த் துறை, நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர், போலீசார் பாதுகாப்புடன் ராமேஸ்வரம் ரோடு பாரதிநகர், குமரய்யா கோயில் அருகே, டி-பிளாக், பழைய செக்போஸ்ட் உள்ளிட்ட இடங்களில் ரோட்டை ஆக்கிரமித்து இருந்த கடைகளின் கூரைகள், தரைத்தளங்கள் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.