உள்ளூர் செய்திகள்

நிழற்குடை கோரிக்கை

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே கீழத்துாவல், மேலத்துாவல் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் முதுகுளத்துார் - -பரமக்குடி ரோடு கீழத்துாவல் விலக்கு ரோட்டில் காத்திருந்து பஸ் ஏறுகின்றனர். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை சேதமடைந்ததால் அகற்றப்பட்டது. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள் மழை, வெயிலில் மரத்தடி நிழலில் காத்திருந்து செல்கின்றனர். எனவே இங்கு மீண்டும் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ