உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வரத்துக்கால்வாயில் வளர்ந்துள்ள நாணல் செடியை அகற்ற கோரிக்கை

வரத்துக்கால்வாயில் வளர்ந்துள்ள நாணல் செடியை அகற்ற கோரிக்கை

கமுதி: கமுதி பேரையூர் அருகே வரத்துக்கால்வாயில் நாணல் செடிகள் வளர்ந்து இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பருவ மழைக் காலங்களில் பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து கமுதி பகுதி உள்ள பரளையாறு, குண்டாறுக்கு திறந்த விடப்படுகிறது. பரளையாறு வரத்துக் கால்வாய் பேரையூர் இலந்தைக்குளம் வரத்து கால்வாய் வழியாக இலந்தைகுளம், கிடாத்திருக்கை, எஸ்.பி.கோட்டை உட்பட பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்ல வசதியாக உள்ளது. இதையடுத்து பேரையூர் வரத்துக்கால்வாயில் கடந்த பல மாதங்களாக நாணல் செடிகள் அதிகம் வளர்ந்து இருப்பதால் இவ்வழியே செல்லும் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன்கருதி திறந்து விடப்படும் தண்ணீரை முறையாக கண்மாயில் சேமித்து வைப்பதற்காக கோடை காலத்தை பயன்படுத்தி வரத்துக் கால்வாயில் வளர்ந்துள்ள நாணல் செடிகள், கருவேல் மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை