உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேசிய நெடுஞ்சாலையில் எரியாத விளக்குகளால் விபத்து அபாயம்

தேசிய நெடுஞ்சாலையில் எரியாத விளக்குகளால் விபத்து அபாயம்

திருவாடானை : திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட விளக்குகள் எரியாமல் உள்ளதால் கிராம இணைப்பு சாலைகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது. இதில் கார்கள் குறைந்தபட்சம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ., வேகத்தில் செல்வதால் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது.குறிப்பாக கிராமங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையும் பகுதியில் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில் திருவாடானையிலிருந்து ஆர்.எஸ்.மங்கலம் வழியாக செல்லும் ரோட்டில் சின்னக்கீரமங்கலம், மேல்பனையூர், ஏ.ஆர். மங்கலம், செங்கமடை, இந்திராநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது.இதனால் அப்பகுதியில் இருளாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் எரியாத மின் விளக்குகளை எரிய வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை