உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் மூழ்கி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் குடும்பத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ரூ.10 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார். ஆக.31ல் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் விசைப்படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி மூழ்கடித்ததில் மீனவர்கள் மலைச்சாமி, ராமச்சந்திரன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் மலைச்சாமி உடலை மீட்ட இலங்கை கடற்படையினர் ஆக.3ல் ராமேஸ்வரத்திற்கு அனுப்பினர். காணாமல் போன மீனவர் ராமச்சந்திரன் உடலை மீட்கவும், குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி நேற்று கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மீனவர் ராமச்சந்திரன் மனைவி கணபதியிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். ராமநாதபுரம் மீன்துறை துணை இயக்குனர் பிரபாவதி, ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத் தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர் வில்லாயுதம் உட்பட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை