உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; மரைன் போலீசார் அறிவுரை

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; மரைன் போலீசார் அறிவுரை

தொண்டி : தொண்டி கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கையால் பாதுகாப்புகாக இருக்க மரைன் போலீசார் அறிவுரை கூறினர்.தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதிக உயரத்தில் எழும்பலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. நேற்றும், இன்றும் இந்நிகழ்வு நடக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கபட்டது. அதனை தொடர்ந்து தேவிபட்டினம் மற்றும் தொண்டி மரைன் போலீசார் கடற்கரை ஓர கிராமங்களுக்கு சென்று எச்சரிக்கை அறிவிப்பை செய்தனர். கடல் அலை அதிக உயரத்திற்கு எழ வாய்ப்புள்ளதால் மீனவர்கள் படகுகளை கரையில் இருந்து துாரத்தில் நிறுத்தி வைக்க வேண்டும். கடற்கரை ஓரமாக குடியிருப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி