உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்சிப் பொருளாக கழிப்பறை வளாகம் அரசு நிதி வீணடிப்பு

காட்சிப் பொருளாக கழிப்பறை வளாகம் அரசு நிதி வீணடிப்பு

கீழக்கரை,: கீழக்கரை நகருக்கு வரும் வெளியூர், சுற்றுவட்டார பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் பயன்பாட்டிற்காக 2017ல் ஒருங்கிணைந்த கழிப்பறை வளாகம் அமைக்கப்பட்டது.மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில் 2014ல் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 10 நடமாடும் கழிப்பறை கொண்டுவரப்பட்டது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரையோரத்தில் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நடமாடும் கழிப்பறை வளாகம் எவ்வித பயன்பாடு இன்றி காட்சி பொருளாகவும் சேதமடைந்துள்ளது. கீழக்கரைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணி செய்யது கூறியதாவது:இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக கடற்கரையோரங்களில் திறந்த வெளியில் செல்ல வேண்டி உள்ளது. சேதமடைந்த கழிப்பறையால் எவ்வித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த கழிப்பறை வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அரசு நிதி வீணடிப்பை தவிர்க்கலாம். பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை