விளக்கு பூஜையுடன் ஆன்மிக சொற்பொழிவு
கமுதி : கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் பகவதி அம்மன் கோயிலில் மாசிக்களரியை முன்னிட்டு விளக்கு பூஜை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.பகவதி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, 108 விளக்கு பூஜை நடந்தது. முன்னாள் தேயிலை தோட்டத்துறை இயக்குனர் கோட்டைச்சாமி தலைமை வகித்தார். பேராசிரியர்கள் பாண்டியன், ஆதிமூலம், பொன்முத்து முன்னிலை வகித்தனர்.சிந்தனை மன்றத்தின் தலைவர் ஆறுமுகம், ஆப்பநாடு வரலாற்று ஆய்வாளர் மாயக்கிருஷ்ணன் ஆகியோர் சிவராத்திரியின் முக்கியத்துவம், விளக்கு பூஜை மகிமை, குலதெய்வ வழிபாடு மற்றும் விடுதலை போரில் நேதாஜி, தேவருடன் இணைந்து போராடிய வீரர்களின் தியாகம் பற்றி சொற்பொழிவாற்றினர். உடன் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.