மேலும் செய்திகள்
பா.ஜ., கட்சியின் 2வது பூத் கமிட்டி ஆலோசனை
1 hour(s) ago
அக்.11ல் ரேஷன் குறை தீர் முகாம்
1 hour(s) ago
நாளை (அக்.9) மின்தடை
1 hour(s) ago
பல மாதங்களாக வராத குடிநீர்: மக்கள் அவதி
1 hour(s) ago
கமுதி:-கமுதி புனித அந்தோணியார் சர்ச் தேர் திருவிழாவை முன்னிட்டு முக்கிய வீதிகளில் தேர் பவனி நடந்தது.கமுதி மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் சர்ச் 300 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஜூன் 3ல் சர்ச் கொடியேற்ற விழா நடந்தது. அந்தோணியார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்து சர்ச் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. அதன்பின் தினந்தோறும்சிறப்பு பிரார்த்தனை நடந்தது. காலை திருவிழா திருப்பலி நடந்தது.மாலை புனித அந்தோணியார், புனித ஜெபஸ்தியார், புனித சவேரியார், புனித மிக்கேல் சம்மனசு ஆண்டவர் தேர்பவனி மின்னொளி அலங்காரத்துடன் சர்ச்சில் இருந்து புறப்பட்டது.தேர்பவனி நாடார் பஜார், முஸ்லிம் பஜார், செட்டியார் பஜார் உட்பட கிராம முக்கிய வீதிகள்வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் பொரிகடலை, மிளகு, உப்பு, மலர்மாலை, மெழுகுவர்த்தி கொடுத்து வழிபட்டனர். ஊர்வலத்தின் போது சென்னை உட்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரத உறவின் முறையார், விழாக் குழுவினர் செய்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago