உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தபால் தலை சேகரிப்பு கண்காட்சி

தபால் தலை சேகரிப்பு கண்காட்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அஞ்சல் கோட்டம் சார்பில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் தபால் தலை சேகரிப்பு கண்காட்சி நடந்தது.ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தலைமை வகித்தார். துாத்துக்குடியைச் சேர்ந்த தபால் தலை சேகரிப்பாளர் சுந்தரம் தபால் தலையின் முக்கியத்துவம், அவற்றை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார்.தபால் தலை தொடர்பான வினாடி வினா போட்டி நடந்தது. பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர் சுப்பையா, உப கோட்ட கண்காணிப்பாளர் சரத், வணிக மேலாளர் பாலு, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி