உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில அளவிலான மல்லர் கம்பம்  போட்டி:  மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான மல்லர் கம்பம்  போட்டி:  மாணவர்கள் சாதனை

ராமநாதபுரம்: ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டியில், ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.ஈரோடு ஆச்சார்யா பள்ளியில் தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகம் சார்பில், மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டி நடந்தது. மல்லர் கம்பம், கயிறு, தொங்கும் மல்லர் கம்பம் ஆகிய போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 9 மாணவர்கள் பங்கேற்றனர்.14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் மாணவிகள் லத்திகா, ஜனனி ஸ்ரீ, கனிஷ்கா, ரித்திகா, ஸ்ரீரோஷினி ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர். மாணவர்கள் தருண், ஹரிஸ்யோகதர்ஷன், ஸ்ரீஹர்சன், ஜஹாஸ்டியன் ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். சாதித்த மாணவர்களை ராமநாதபுரம் மாவட்டம் மால்கம் கழக தலைவர் பாஸித், செயலாளர் மேத்யு இம்மானுவேல், பொருளாளர் தீபிகா, மல்லர் கம்பம் பயிற்சியாளர் திருமுருகன், பெற்றோர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ