உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி அருகே கோழிக் கழிவுகள் துர்நாற்றத்தால் மாணவர்கள் பாதிப்பு

கல்லுாரி அருகே கோழிக் கழிவுகள் துர்நாற்றத்தால் மாணவர்கள் பாதிப்பு

திருவாடானை: திருவாடானை அரசு கலைக்கல்லுாரி அருகே கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருவாடானை மங்களநாதன் குளம் அருகே அரசு கலைக்கல்லுாரி உள்ளது. கல்லுாரி காம்பவுண்ட் சுவரை ஒட்டி கல்லுார் ஊராட்சிக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் இறைச்சிக் கடைக்காரர்கள், ஓட்டல் நடத்துவோர் கடைகளில் சேரும் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து இரவு நேரத்தில் கொட்டிச் செல்கின்றனர்.சில சமயங்களில் இவற்றில் தீ வைத்து செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் மற்றும் புகையால் கல்லுாரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து கல்லுாரி பேராசிரியர்கள் கூறுகையில், துர்நாற்றத்தால் ஜன்னல் கதவுகளை மூடிவைக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் விளையாட முடியாமல் தவிக்கின்றனர்.கல்லுாரி நிர்வாகம் சார்பில் சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். சுகாதார சீர்கேட்டால் கல்லுாரி மாணவர்கள் பாதிக்கபடுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி