உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே அலங்கானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடந்தது. தலைமையாசிரியர் ஜானகி தலைமை வகித்தார். தமிழாசிரியர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கதீஜாபானு வரவேற்றார்.தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டாடுவதால் மட்டுமே பெருமை கொள்ள வேண்டும். தாய் மொழியான தமிழ் நம் தமிழர்களின் அடையாளம் என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் நடனம் , சிலம்பம் நடந்தது. விழாவில் ஆசிரியர்கள் இப்ராஹிம், பூப்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ