மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
7 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
7 hour(s) ago
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் கடலில், 550 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி முடிந்து, பாலம் நடுவில் துாக்கு பாலம் பொருத்தப்பட்டது. இதில், துாக்கு பாலத்தில் அதிர்வு ஏற்படுகிறதா என்பதையும், அதன் திறன் குறித்து பரிசோதிக்கவும் நேற்று பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. நேற்று காலை, 10 முதல் 60 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னை ஐ.ஐ.டி., பொறியாளர்கள் குழு, துாக்கு பாலத்தின் தண்டவாளத்தில் 'சென்சார்' கருவிகள் பொருத்தி, அளவீடு கருவி வாயிலாக அதிர்வு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர். இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இதன் ஆய்வறிக்கை ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் என, ஐ.ஐ.டி., குழுவினர் தெரிவித்தனர்.பாம்பன் புதிய பாலத்தில் கருங்கற்கள் நிரப்பிய சரக்கு ரயிலுடன் மொத்தம் 1,160 டன் எடையில் சோதனை ஓட்டம் நடந்தது.இனிவரும் நாளில் பயணியர் ரயில் பெட்டியுடன் சோதனை ஓட்டமும், துாக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனையும் நடக்கும் என, ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago