உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தங்கச்சிமடத்தில் பயன்பாடின்றி குடிநீர் மையம் முடங்கியது

தங்கச்சிமடத்தில் பயன்பாடின்றி குடிநீர் மையம் முடங்கியது

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வராமலே குடிநீர் விநியோக மையம் முடங்கியதால் அரசு நிதி ரூ.5 லட்சம் வீணாகியது.தங்கச்சிமடம் ஊராட்சியில் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் தடையின்றி கிடைப்பதால் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. இந்நிலையில் சுற்றுலா பயணிகள், மற்றும் வியாபாரிகளுக்கு சுத்திகரித்த குடிநீர் விற்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து தங்கச்சிமடத்தில் மழலையர் பள்ளி வளாகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.5 லட்சத்தில் சுத்திகரிப்பு மையம் அமைத்தது.ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீரை விற்காமல் முடங்கியுள்ளது. இதனால் இங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், குழாய்கள் பழுதாகி வீணாகிப் போனது. மக்களின் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகியது. மேலும் குடிநீர் மையத்திற்காக அகற்றிய பள்ளி பாதுகாப்பு வேலியை சரி செய்யாததால் நாய்கள், கால்நடைகள் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை அச்சுறுத்துகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி