உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொது இடங்களில் புகைபிடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

பொது இடங்களில் புகைபிடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

திருவாடானை : பொது இடங்களில் புகை பிடிப்போர் அதிகரிப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருவாடானை, தொண்டி பகுதியில் பொது இடத்தில் புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை ஒட்டிய டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பலரும் புகை பிடிக்கின்றனர். இவர்களால் புகையிலையை பயன்படுத்தாதவர்களுக்கு சுவாச பிரச்னை, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. குறிப்பாக சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிதும் அவதியடைகின்றனர். ஆகவே பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்